இந்தியாவில் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடம் - மத்திய அரசு தகவல்.! - Seithipunal
Seithipunal


மக்களவையில் நாட்டில் நடைபெற்று வரும் தற்கொலைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு நலன் துறை மற்றும் மத்திய குற்ற ஆவண காப்பகம் பதில் அளித்துள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது:- 

"இந்தியாவில் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் சுமார் 1,64,033 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் உயிரிழப்பதற்கு வேலையின்மை மற்றும் பணியிலிருந்து நீக்கப்பட்டதன் மனச்சுமை காரணம் இல்லை.

இதற்கு, பல்வேறு காரணங்கள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் 18,925 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

இந்நிலையில், இந்தியாவில் அதிகம் பேர் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது என்று மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu second place for sucide in india


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->