தென்பெண்ணை நதிநீர் பங்கிட்டு தீர்ப்பாயம்..!! மத்திய அரசுக்கு கெடு விதித்த உச்ச நீதிமன்றம்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தென்பெண்ணை நதியின் நீர் பங்கிட்டு தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்கும் வரை மார்க்கண்டேயன் நதியில் குறைக்கு அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. தென்பெண்ணை நதிநீர் பங்கேற்று தொடர்பாக பல்வேறு தரப்பட்ட பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு எட்டப்படாததால் தீர்ப்பாயத்தின் மூலம் சமூகத் தீர்வு காணப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெளிவுபடுத்தி இருந்தது.

அப்பொழுது நான்கு வாரங்களுக்குள் நதிநீர் பங்கிட்டு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிகுறித்து இருந்தது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது இந்த விவகாரம் தொடர்பாக நான்கு துறை அமைச்சகங்களுக்கு விளக்கம் கேட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதால் தீர்ப்பாயம் அமைக்க ஆறு மாதம் கால அவகாசம் வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை வைத்தது.

இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மூன்று மாதங்கள் மட்டுமே மத்திய அரசுக்கு கால அவகாசம் கொடுத்துள்ளனர். இந்த மூன்று மாதத்திற்குள் தென்பெண்ணை நதி நீர் பங்கிட்டு தீர்ப்பாயம் அமைத்து அதற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு அடுத்த விசாரணையை வரும் மார்ச் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SupremeCourt ordered central govt form Thenpennai water distribution tribunal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->