ராமர் கோவில் கும்பாபிஷேகம் - பொது விடுமுறையை ரத்து செய்ய கோரி மாணவர்கள் வழக்கு.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு நாளை மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு அரைநாள் விடுமுறை அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினை பின்பற்றி, பல்வேறு மாநில அரசுகளும் நாளை பொது விடுமுறை அறிவித்துள்ளன. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்திலும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பொது விடுமுறையை எதிர்த்து நான்கு சட்டக் கல்லூரி மாணவர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில், "அதிகாரத்தில் இருக்கும் அரசியல் கட்சி அதன் விருப்பத்திற்கு ஏற்ப பொது விடுமுறை அளிக்க முடியாது. மத நிகழ்ச்சியை கொண்டாட பொது விடுமுறை அறிவித்திருப்பது, அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை கொள்கைகளை மீறுவதாகும். 

ஒரு அரசு எந்த மதத்துடனும் தொடர்பு கொள்ளவோ அல்லது ஊக்குவிக்கவோ முடியாது" என்று தெரிவித்துள்ளனர். இந்த மனு குல்கர்னி, நீலா கோகாலே நீதிபதிகள் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

students case file against holiday announce for ramar temple kumbabishegam


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->