4300 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம், பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள 4300 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் வரும் 30-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள 4300 பணியிடங்களில், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 86 காலி பணியிடங்களும், மத்திய ரிசர்வ் காவல் படையில் 3112  காலி பணியிடங்களும், எல்லை பாதுகாப்பு படையில் 353 காலி பணியிடங்களும், டெல்லி துணை காவல் ஆய்வாளர் பணியில் 340 காலி பணியிடங்களும், இந்தோ - திபெத் எல்லை காவல் படையில் 191 காலி பணியிடங்களும், சாஸ்த்ரா சீமா பாலில் 218 காலி பணியிடங்களும் உள்ளன. 

SSC Recruitment 2018: Notification For Various Posts Released by Staff  Selection Commission; Apply at ssc.nic.in | India.com

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஏதாவது ஒரு இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், 20 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படுகிறது.  

இந்த காலி பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, உடல் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இதற்கான தேர்வு மையம் அமைக்கப்படும்.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், வருகின்ற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 செலுத்தி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில், பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

staff selection commission released notification 4300 vacancies.


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->