தாம்பரம் - எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில்..! தெற்கு ரெயில்வே அறிவிப்பு...! - Seithipunal
Seithipunal


வார இறுதி நாட்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தாம்பரம் - எர்ணாகுளம் இடையே இன்றும், நாளையும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி, (ரயில் எண் 06080) எர்ணாகுளம் - தாம்பரம் சிறப்பு ரயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எர்ணாகுளத்தில் இருந்து இரவு 7 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 08.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். 

(ரயில் எண் 06079) தாம்பரம் - எர்ணாகுளம் சிறப்பு ரயில் நாளை (திங்கட்கிழமை) தாம்பரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.15 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். 

மேலும் விஜயவாடா கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, (ரயில் எண் 17237) பித்ரகுண்டாவில் இருந்து 04.45 மணிக்கு புறப்படும் பித்ரகுண்டா - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயிலும், (ரயில் எண் 17238) 4.30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சென்னை சென்ட்ரல் - பித்ரகுண்டா எக்ஸ்பிரஸ் ரயிலும் ஜூன் 26 முதல் 30 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Special train service from Tambaram to Ernakulam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->