காசி தமிழ் சங்கமம் - தமிழகத்தில் இருந்து சிறப்பு ரெயில் இயக்கம்.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசியில் வருகிற 17-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை இரண்டாவது 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சிக்காக தென்னிந்தியாவில் இருந்து வாரணாசிக்கு வரும் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி, வருகிற 15ம் தேதி ரெயில் எண். 06101, டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்- வாரணாசி சிறப்பு ரெயில் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட உள்ளது.

இதேபோல், 19ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு ரெயில் எண் 06105, கோயம்புத்தூர்- வாரணாசி சிறப்பு ரெயில் கோயம்புத்தூரில் இருந்தும், 20ஆம் தேதி ரெயில் எண். 06103, கன்னியாகுமரி-வாரணாசி சிறப்பு ரெயில் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

special train run to kasi tamil sangamam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->