திருவனந்தபுரம் - மதுரை, மங்களூர், குருவாயூர், எர்ணாகுளம் - கண்ணூர் சிறப்பு இரயில்கள் இயக்கம்..! - Seithipunal
Seithipunal


கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பொதுப்போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வுகளை தொடர்ந்து, நிறுத்தப்பட்டு இருந்த பல்வேறு இரயில்கள் அடுத்தடுத்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தென்னக இரயில்வே இரயில் பயணிகளுக்கான அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இது குறித்து தென்னக இரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், " திருவனந்தபுரம் - எர்ணாகுளம் இடையே இயக்கப்படும் 06304 சிறப்பு இரயில் (14/12/2020) முதல் மாலை 5.45 மணிக்கு இயக்கப்படும். மறுமார்க்கமாக எர்ணாகுளம் - திருவனந்தபுரம் இடையே 06303 16 ஆம் தேதியன்று அதிகாலை 5.05 மணிக்கு இயக்கப்படும்.

எர்ணாகுளம் - கண்ணூர் இடையே இயக்கப்படும் 06305 சிறப்பு இரயில், வரும் 15 ஆம் தேதி முதல் காலை 6 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்தும், மறுமார்க்கமாக கண்ணூர் - எர்ணாகுளம் 06306 இடையே மதியம் 2.50 மணிக்கு கண்ணூரில் இருந்து இயக்கப்படும்.

திருவனந்தபுரம் - மங்களூர் இடையே இயக்கப்படும் 06347 சிறப்பு இரயில், வரும் 16 ஆம் தேதி முதல் இரவு 8.50 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்தும், மறுமார்க்கமாக மங்களூர் - திருவனந்தபுரம் 06348 இடையே மதியம் 2.20 மணிக்கு 19 ஆம் தேதி இயக்கப்படும். 

திருவனந்தபுரம் - மதுரை இடையே இயக்கப்படும் சிறப்பு 06343 இரயில், வரும் 23 ஆம் தேதி முதல் இரவு 8.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்தும், மறுமார்க்கமாக மதுரை - திருவனந்தபுரம் 06344 இடையே, மாலை 4.05 மணிக்கு 23 ஆம் தேதி இயக்கப்படும். 

திருவனந்தபுரம் - குருவாயூர் இடையே இயக்கப்படும் 06342 சிறப்பு இரயில், வரும் 15 ஆம் தேதி முதல் மாலை 5.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்தும், மறுமார்க்கமாக குருவாயூர் - திருவனந்தபுரம் 06341 இடையே, 16 ஆம் தேதி மதியம் 3.25 மணிக்கு இயக்கப்படும். 

தாம்பரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு இரயில் 06065 வரும் 16 ஆம் தேதி முதல் ஞாயிறு, திங்கள், புதன்கிழமைகளில் இரவு 7.25 மணிக்கு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என்றும், மறுமார்க்கமாக நாகர்கோவில் - தாம்பரம் 06066 இடையே, வரும் 17 ஆம் தேதி முதல் திங்கள், செவ்வாய், வியாழக்கிழமையில் மாலை 4.15 மணிக்கு இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Southern Railway Announce Trivandrum Madurai Ernakulam Kannur Mangalore Train Announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->