வங்காளதேசம் : ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து - 6 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


வங்காளதேசம் மாநிலத்தில் உள்ள சிட்டகாங்க் அருகே சீதகுண்டா பகுதியில் ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து தொழிற்சாலையில் இருந்த பணியாளர்கள் அனைவரும் பதறி அடித்துக்கொண்டு வெளியில் ஓடி வந்தனர். இருப்பினும் பலர் தீ விபத்தில் சிக்கியுள்ளனர். அதன் பின்னர் சம்பவம் தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

அந்த தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பலமணி நேர போராட்டத்திற்குப் பிறகு அவர்கள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். 

அதைத் தொடர்ந்து, அவர்கள் தீயை கட்டுப்படுத்தி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 
பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

மேலும், மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே போலீசார் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six peoples died for oxygen factory fire accident in bangaladesh


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->