அரசு பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் நடத்துனரை தாக்கிய 6 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள், சோழபுரம் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு நகர பேருந்து ஒன்று கும்பகோணம் நோக்கி வந்துள்ளது. இதையடுத்து பேருந்து, பழைய பாலக்கரை அருகே வந்தபோது கஞ்சா போதையில் இருந்த எட்டு பேர் கொண்ட கும்பல் பேருந்தை வழி மறித்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு ஓட்டுநர் மற்றும் நடத்துநரை பேருந்தில் இருந்து கீழே தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், அவர்கள் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த இரு தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில், படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இரு தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் உள்ளிட்ட நால்வரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்ட பாலக்கரையைச் சேர்ந்த சுதர்சன், ஜனார்த்தனன், உதயகுமார், கார்த்திகேயன், மாரிமுத்து உள்பட ஆறு பேரை கைது செய்து, அவர்கள் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six peoples arrested for attack govt bus driver and conductor in kumbakonam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->