இந்தியாவிலேயே முதல் முறையாக புதுவையில் தயாராகும் செமி சப் மெரின் படகு.! - Seithipunal
Seithipunal


கடலில் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள், ஆழ்கடலின் அழகை ரசிப்பதற்கு நீர்மூழ்கி கப்பலில் செல்ல வேண்டும். ஆனால், இதற்கு அதிக செலவாகும் என்பதால், பயணிகள் இதனை தவிர்த்து வந்தனர். தற்போது இந்த நீர்மூழ்கி கப்பலுக்கு பதிலாக செமிசப் மெரின்' என்றழைக்கப்படும் விசைப் படகுகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. 

இந்த படகில் அமர்ந்தபடி கடல் அழகை ரசிக்கும் வகையில் இரண்டு பக்கமும் நீர் உள்ளே செல்லாத அளவிற்கு கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த படகின் மூலம் கடலுக்குள் செல்லும் போது படகில் கீழடுக்கு ஆழ்கடலில் பயணிப்பதால் அதில், உள்ளவர்கள் ஆழ்கடல் அதிசயங்கள், பவளப் பாறைகள் மற்றும் நீர் வாழ் உயிரினங்களை உள்ளிட்டவற்றைக் கண்டு ரசிக்கலாம். 

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, அந்தமான் தீவுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த படகுகளை அந்தமானில் உள்ள ஒரு சுற்றுலா நிறுவனத்திற்காக இந்தியாவிலேயே முதல்முறையாக புதுவையில் உள்ள பி.என்.டி.படகு கட்டும் தனியார் நிறுவனம் தயாரித்து வருகிறது.

உப்பளம் துறைமுகத்தில் ரூ.4 கோடி செலவில் தயாரிக்கப்படும் 'டிரை மரான்' எனும் செமி சப் மெரின் விசைப் படகு சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அலுமினியத்தால் தயாரிக்கப்படுகிறது. இந்த விசைபடகில் 50 பேர் பயணிக்கலாம். 

சுற்றுலா பயணிகள் ஆழ்கடல் அழகை ரசித்து செல்லும் வகையில், படகின் இருபுறத்திலும் நீர் உள்ளே செல்லாத வண்ணம் 14 கண்ணாடி ஜன்னல்களும், கப்பல்  ஆழ்கடலில் செல்லும்போது ஆடாமல் பயணம் செய்வதற்காக இருபுறமும் இறக்கை போன்ற அமைப்பு அமைக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

semi submarine boat make in puthuchery at first time in india


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->