பள்ளி மாணவியை கடத்திய பேஸ்புக் நண்பர்.! விசாரணையில் திடுக்கிடும் தகவல்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவர் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். செல்போன் பயன்படுத்தும் பழக்கம்முடைய இவர் பேஸ்புக் மூலம் ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

அந்த பேஸ்புக் நண்பர் இந்த மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டிற்கே வந்து அந்த மாணவியை கடத்தியுள்ளார். 

இதனையறிந்த அந்த மாணவியின் பெற்றோர் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மாணவியின் செல்போனை சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்ததில் மாணவி திருச்சூரில் இருப்பது தெரியவந்தது.

அதன்பிறகு, அங்கு சென்ற போலீசார் அந்த மாணவியை காப்பாற்றினார். அங்கு இருந்த சந்தியா என்ற பெண்ணை கைது செய்தனர். மேலும், அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் ஆண் வேடம் அணிந்து பள்ளி மாணவியை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. இவர் ஏற்கனவே கடந்த 2016ல் 14 வயது சிறுமியை கடத்தி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மீட்கப்பட்ட பள்ளி மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், கடத்தப்பட்ட சந்தியா என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

26 வயதாகும் சந்தியா கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்‌. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. ஆனால், இவர் மனநலம் சரியில்லாதவர் என கூறப்படுகிறது. பெண் ஒருவர் ஆண் வேடமணிந்து பள்ளி மாணவியை ஏமாற்றி கடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School girl kidnapped Facebook friend


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->