சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு.! - Seithipunal
Seithipunal


சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

நாளை ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை நடைபெற உள்ள நிலையில், சபரிமலையில் இன்று நடை திறக்கப்படுகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை நாளை நடைபெறுகிறது.

அதன் காரணமாக இன்று அச்சன் கோவிலில் இருந்து நிறை புத்தரிசி ஊர்வலம் நடைபெறும். மலையாள புத்தாண்டான சிங்கம் மாதம் ஆவணி பிறப்பை முன்னிட்டு கேரளாவில் உள்ள கோயில்களில் கடவுள்களுக்கு நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி சபரிமலையில் நாளை காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மல்யம் முடிந்தவுடன், நிறை புத்தரிசி நெற்கதிர்களை சாமி கருவறையில் வைத்து பூஜைகள் நடத்தப்பட உள்ளது. பூஜைக்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக நெற்கதிர்கள் வழங்கப்படும். இதனை வீட்டில் வைத்து வழிபட்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்கும் என்பது நம்பிக்கை.

மேலும், ஆவணி மாத பூஜைகளுக்காக ஆகஸ்ட் 16ம் தேதியும், திருவோண பூஜைகளுக்காக ஆகஸ்ட் 27ம் தேதியும் சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sabarimalai Ayyappan temple today open


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->