சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை.. அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ந் தேதி முதல் நடை திறக்கப்பட்டது. 

கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் இந்த ஆண்டு மிக பிரம்மாண்டமாக நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு போன்றவற்றின் மூலம் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் சரியான நேரத்திற்கு வந்தால் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.  இருப்பினும், கூட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் சூழ்நிலை தான் நிலவி வருகிறது.

 இதனால், பக்தர்களின் வசதிக்காக கோவில் நடை திறப்பு நேரத்திலும் தேவஸ்தானம் மாற்றம் செய்துள்ளது. அதாவது, வழக்கமாக அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு வந்த நடை, தற்போது 3 மணிக்கே திறக்கப்படுகிறது. அதேபோல் மாலையிலும் நடை மாற்றப்பட்டுள்ளது.

அதேபோல், வழக்கமான நாட்களை விட சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சபரிமலைக்கு பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. இதையடுத்து தரிசன நேரத்தை அதிகரிக்க தேவசம் போர்டு உத்தரவிட்டது. இருந்தும் காத்திருப்பு தொடர்ந்தது. எனவே, குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு தனி வரிசை அமைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தஉத்தரவிட்டது.

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் தனிவரிசை நடைமுறைக்கு வந்தது. இதனால் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்தனர். காத்திருப்பு நேரமும் குறைந்துள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 38 நாட்களில் 26 லட்சத்து 476 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை நாளை மறுநாள் (டிசம்பர் 27ம் தேதி) நடைபெற உள்ளது. இதனையடுத்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மண்டல பூஜையையொட்டி நாளை (26ம் தேதி) அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. இதை காண சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sabarimalai Ayyappan temple crowd for mandala poojai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->