சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு குட் நியூஸ்.. பிப்.17ம் தேதி வரை நடை திறப்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக தளர்த்தப்பட்டதால் கடந்த சீசனில் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் சபரிமலையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன் கடந்த மாதம் 20-ந்தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாசி மாத பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. மேலும், பிப்ரவரி 17ம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். 

இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷ பூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும்.

மேலும், வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sabarimala Ayyappan temple is open till February 17


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->