நாளை நீட் தேர்வு அறைக்குள் மாணவர்கள் இப்படித்தான் வரவேண்டும்.! விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகள்.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் 2019-20-ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு தேர்வு, நாளை (5-ம் தேதி) நடைபெறுகிறது. மேலும் தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி , மாலை 5 மணிக்கு நிறைவு பெறும்.  

நீட் தேர்வு நாடு முழுவதும்  154 நகரங்களில் நடைபெற உள்ளது. மேலும் தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், மதுரை, திருவள்ளூர், கரூர், தஞ்சாவூர், நெல்லை, திருச்சி, சேலம், நாமக்கல் உள்பட 14 நகரங்களில் நடைபெறுகிறது.

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. 

நாளை மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கி 5 மணிக்கு நிறைவு பெறுகிறது. தேர்வு மையத்துக்கு அரைமணி நேரத்துக்கு முன்னதாக 1.30 மணிக்குள் தேர்வர்கள் வரவேண்டும். பிற்பகல் 1.30 மணிக்கு பிறகு வந்தால் தேர்வு மையத்துக்குள் அனுமதி இல்லை.

மாணவர்கள் ஹால் டிக்கெட்டையும், அடையாள ஆட்டத்தை ஒன்றையும் கொண்டு செல்லவேண்டும். மேலும் ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவு செய்த அதே பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்றை கொண்டு வரவேண்டும்.

பர்ஸ், கண்ணாடி, கைப்பை, பெல்ட், தொப்பி, வாட்ச், அணிகலன்கள், சாப்பிடும் உணவுகள், வாட்டர் பாட்டில்களுக்கு அனுமதி கிடையாது.மாணவிகள் தலையில் கிளிப், மூக்குத்தி , காதுவளையம் அணிய கூடாது .

தேர்வு எழுத பால்பாயிண்ட் பேனா தேர்வு மையத்திலேயே வழங்கப்படும். கால்குலேட்டர், பேனா, அளவுகோல், எழுத பயன்படுத்தும் அட்டை ஆகியவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

மாணவர்கள் வெளிர் நிறத்திலான அரைக்கை ஆடைகள் அணிந்து வர வேண்டும். முழுக்கை ஆடைகள் அணிந்து வரக்கூடாது. 

மாணவிகள்  முழு கை சுடிதார், பிளவுஸ் அணியக்கூடாது.  சுடிதார், குட்டைப் பாவடை அணிந்து வரலாம்.

சம்பிரதாய மற்றும் பாரம்பரிய உடைகள் அணிந்து வருபவர்கள் தேர்வு அறைக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக வர வேண்டும்.

செருப்புகள் மற்றும் குறைந்த உயரத்திலான செருப்புகள் அனுமதிக்கப்படும். ஷூக்கள் அணிந்து வரக்கூடாது.

English Summary

rules and regulation for neet exam


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal