தொடரும் கனமழையால் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரெட் அலர்ட்.! தேசிய வானிலை ஆய்வு மையம்.! - Seithipunal
Seithipunal


தொடரும் கனமழையால் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது தேசிய வானிலை ஆய்வு மையம்.

பருவமழை தீவிரமடைந்ததையொட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தொடரும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக உத்திரக்கண்டில் டேராடூன், டெஹ்ரி, பவுரி, நைனிடால், சம்பவத், உதம் சிங் நகர் மற்றும் ஹரித்வார் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தேசிய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

மேலும் சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் எனவும், கனமழையால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து சுற்றுலா பயணிகள் தங்கள் பயணத்தை ஒத்தி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்கமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Red alert for uttrakhand due to heavy rains and landslide


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->