6 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்:  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


பஞ்சாப், அரியானா, சண்டிகர் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு கடும் பனிமூட்டம் காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. 

வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில் சேவை, விமான சேவை போன்றவை தாமதமாகிறது. நாட்டில் பஞ்சாப், அரியானா, சண்டிகர், உத்தர பிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய 6 மாநிலங்களிலும் ஜனவரி 28ஆம் தேதி வரை கடும் பனிமூட்டம் நிலவு நிலவக்கூடும் என்பதால் வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேலும் ஹிமாலயா பகுதிகளில் வருகின்ற 30ஆம் தேதி வரை லேசான மழை அல்லது பனிமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வட இந்திய மாநிலங்களில் ம் நாளை வரை கடும் குளிர் நிலவும் எனவும் பிறகு குளிர் அளவு குறைய தொடங்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடும் குளிர் காரணமாக புதுடெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Red alert 6 states Meteorological Department 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->