கை வச்சி தேச்சி பாரு., காண்ட்ராக்டர கூப்டு பாரு... அரசு மருத்துவமனை கட்டிட பணிகள் மெகா அலட்சியம்.! - Seithipunal
Seithipunal


முதுகுளத்தூர் அருகே ரூபாய் 60 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வந்த கிராமப்புற அரசு மருத்துவமனை கட்டுமான பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுகிறது. 

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் மேலச்சிறுபோது கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. புதிய அரசு மருத்துவமனை கட்டிடம் ரூபாய் 60 இலட்சம் மதிப்பீட்டில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகிறது. 

இந்த பணிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், பல்வேறு பணிகளும் நிறைவு பெற்று முடியும் தருவாயில் முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கட்டுமான பணிகள் அனைத்தும் தொட்டாலே பவுடர் உதிர்வது போல மோசமான தரத்தில் கட்டப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. 

மேலும், கட்டுமான பணியின்போது எம்.சாண்ட் உடன் சிமெண்ட் கலக்கப்படவேண்டிய விகிதாச்சாரத்தில் கலைக்கப்படவில்லை என்றும், வெறும் எம்.சாண்ட் + கண்துடைப்புக்கு சிறிதளவு சிமெண்ட் சேர்ந்து கட்டுப்பட்டு வருவதால், கட்டிட பூச்சுகள் தொட்டாலே உதிரும் அளவு உள்ளதாக கூறப்படுகிறது. 

உள்ளூரை சார்ந்த இளைஞர்கள் இதனை வீடியோவாக எடுத்து வைத்து பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக பொதுப்பணித்துறை கட்டுமான இளநிலை பொறியாளர் ஜவஹர் தகவல் தெரிவிக்கையில், " கட்டிடத்தை தரக்கட்டுப்பாட்டு ஆய்வுக்குழுவினர் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்கள். அதன்பின்னரே அதற்கான பணிகள் நடைபெறும். தற்போது பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது " என்று தெரிவித்தார். 

ஆனால், தொட்டால் பெயர்ந்து விழும் அளவிற்கு கட்டிடத்தை கட்டிய நிலையில், எப்படி அதனை ஆய்வு செய்து சான்றிதழ் அளித்து மேற்படி பணிகள் செய்ய அனுமதி அளித்தார்கள்? என்றும் இளைஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதில், கமுதியை சார்ந்த புஷ்பவல்லி மாரிமுத்து என்பவர் ஒப்பந்தம் எடுத்து, பரமக்குடியை சார்ந்த குலாம் நபி என்பவருக்கு கமிஷன் அடிப்படையில் பணி மேற்கொள்ள விட்டதாகவும் கூறப்படுகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram Mudukulathur Melachirupodhu Village Govt Hospital Poor Contraction


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->