துறைமுக திட்டங்களுக்கு சுமார் ரூ.1891 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது - மத்தியரசு தகவல்.! - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற மக்களவையில், நேற்று கேரள உறுப்பினர் ஒருவர், நாட்டில் உள்ள துறைமுகங்கள் மற்றும் அவற்றின் மேம்பாட்டுக்கு வழங்கிய நிதி உதவிகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். 

இதற்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனவால் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 

"இந்தியாவில் மொத்தம் 12 பெரிய துறைமுகங்களும், 217 முக்கியமில்லாத துறைமுகங்களும் உள்ளன. இந்த 217 துறைமுகங்களில் 67 துறைமுகங்களில் மட்டும் சரக்கு கையாளப்படுகிறது. 

மேலும், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் நிர்வானம் செய்யப்படும் துறைமுகங்களைப் பொறுத்தவரை ஒடிசாவில் 2-ம், ஆந்திராவில் 3-ம், குஜராத்தில் 4-ம், தமிழகத்தில் 6-ம், மராட்டிய மாநிலத்தில் 15-ம் உள்ளன. 

அதில், தமிழகத்தில் மட்டும் முக்கியமற்ற துறைமுகங்கள் காட்டுப்பள்ளி, எண்ணூர், கடலூர், திருக்கடையூர், நாகப்பட்டினம் எண்ணெய் குழாம் மற்றும் கூடங்குளம் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ளன. 

இதில் உள்ள கூடங்குளம் துறைமுகத்தை இந்திய அணுசக்தி கழகம் நடத்தி வருகிறது. இந்தத் துறைமுக திட்டங்களைப் பொறுத்தவரை சாகர்மாலா திட்டத்தின் கீழ் 151 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக இதுவரை சுமார் ரூ.1891 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது" என்று அமைச்சர் பதில் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajyashaba meeting Ports Minister Sarbananda Sonawal speach


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->