இந்தியா பலவீனமாக இல்லை, சீண்டினால் தகுந்த பதிலடி கொடுப்போம் - ராஜ்நாத் சிங் - Seithipunal
Seithipunal


இந்தியா பலவீனமாக இல்லை, சீண்டினால் தகுந்த பதிலடி கொடுப்போம் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலம் ஜஜ்ஜரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தேச நலன்களைப் பாதுகாப்பதே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது என்றும், எதிர்கால சவால்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க ராணுவம் அதிநவீன ஆயுதங்களுடனும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உபகரணங்களுடனும் தயாராக இருக்கிறது என்றார்.

மேலும் இந்தியா இப்போது பலவீனமாக இல்லை. நாங்கள் அமைதியை நம்புகிறோம். ஆனால் யாரேனும் நமக்குத் தீங்கு விளைவிக்க முயன்றால், நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம். எங்கள் வீரர்கள் இதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர். 

இதில் 2016-ல் சர்ஜிகல் தாக்குதல், 2019 பாலகோட் வான் வழித் தாக்குதல் மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் எங்கள் வீரர்கள் காட்டிய வீரம் ஆகியவை நமது வலிமை மற்றும் தயார் நிலைக்கு சான்றாகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த ஆண்டு இந்தியா தலைமையில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டிற்காக பிரதமர் அண்மையில் வெளியிட்ட லோகோவில் தாமரை மலர் இந்திய கலாச்சாரத்தின் சின்னமாக உள்ளது என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajnath Singh says India is not weak we will give a befitting reply if we are offended


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->