உத்தரகண்ட் பேருந்து கவிழ்ந்து விபத்து.. காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இரங்கல்.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் இருந்து 40 பக்தர்களுடன் உத்தரகாண்ட் மாநிலம் யமுனோத்ரியை நோக்கி பேருந்து சென்றது.

அப்பொழுது உத்தரகாஷி மாவட்டத்தில் உள்ள டாம்டா பகுதி அருகே உள்ள மலைப் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

இதைத்தொடர்ந்து உத்தரகாண்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், உத்தரகாண்டில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது சென்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். விபத்தில் உயிரிழந்த 25 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi condolences to uthrakhand accident


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->