அரசு பள்ளிகளை மத்திய அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டி அமைச்சர் கோரிக்கை..! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளை மத்திய அரசு பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டி மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம், அமைச்சர் நமச்சிவாயம் கோரிக்கை வைத்துள்ளார். 

அந்தக் கோரிக்கையில், புதுச்சேரியில் நானூறுக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் உள்ளன. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை புதுச்சேரிக்கென தனி கல்வி வாரியம் கிடையாது. தமிழகத்தை ஒட்டியுள்ள புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத்திட்டங்களே பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் யாணம் பிராந்தியத்தில் ஆந்திரா பாடத்திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகள் அனைத்தையும் மத்திய அரசு பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம், புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கோரிக்கை விடுத்துள்ளார். 

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்த மத்திய அமைச்சரை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம் இது தொடர்பாக மனு அளித்துள்ளார். மேலும் இதற்கான நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சர் உறுதியளித்ததாக அமைச்சர் நமச்சிவாயம் தகவல் தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puthuchery govt request to central government


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->