#புதுச்சேரி : 500 கிலோ போதைப்பொருள் கடத்திய ஐந்து பேர் கைது.!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை களைகட்டுகிறது. அதிலும் குறிப்பாக கஞ்சா விற்பனை, சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

இதை தடுப்பதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்த போதிலும் போதை பொருள்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு முடியவில்லை. இதன் காரணமாக காவல்துறையில் புதிதாக போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்புப்பிரிவு குழு உருவாக்கப்பட்டு அதில், போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, இந்த குழுவினர் போதைப்பொருள் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 100 கிலோவுக்கு அதிகமாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.  

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் இன்று பல்வேறு இடங்களில் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக சோதயைில் ஈடுபட்டனர். அதிலும் குறிப்பாக இந்த சோதனை புதுவை தவளக்குப்பம், அரியாங்குப்பம், முதலியார்பேட்டை, உருளையன்பேட்டை, கோரிமேடு உள்ளிட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்  நடத்தப்பட்டது. 

இந்த சோதனையில், பல்வேறு இடங்களில் உள்ள குடோன்களில் பதுக்கி வைத்திருந்த சுமார் 500 கிலோ போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த போதைப்பொருள் தொடர்பாக புஷ்பநாதன், ரங்கநாதன், அப்துல்காதர், ரமேஷ், மணிகண்டன் உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும், கைதானவர்கள் அனைவரும் யார்? யாருக்கெல்லாம் இந்த போதைப் பொருட்களை விற்பனை செய்தார்கள்? என்ற தகவலை போலீசார் திரட்டி வருகிறார்கள். இதில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஐந்து பேரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, புதுச்சேரியில் போதைபொருட்கள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puthucher 500 drugs kidnape five peoples arrested


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->