#BigBreaking || நாளை முதல் 1 to 9 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை.! - Seithipunal
Seithipunal


நாளைமுதல் புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வரை பள்ளிகள் மூடப்படுவதாக சற்று முன்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் பள்ளிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

புதுச்சேரியில் கடந்த டிசம்பர் மாதம் வரை ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா நோய்த்தொற்று, தற்போது படிப்படியாக உயர்ந்து இன்று மட்டும் 444 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. 1250 பேர் தற்போது சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 

இந்நிலையில், புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் சற்றுமுன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,

நாளை (ஜனவரி 10) முதல் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பலிகள் மூடப்படுகிறது. பள்ளிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்.

புதுச்சேரியில் அனைத்து அரசு மற்றும்  தனியார் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் மறுஉத்தரவு வரும்வரை பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் அந்த அறிவிப்பில், புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry School Closed Announce Jab


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->