கின்னஸ் சாதனைக்காக போராடும் புதுச்சேரி காவல்துறை அதிகாரி! - Seithipunal
Seithipunal


கின்னஸ் சாதனை படைக்க உலகில் பலரும் தங்களிடம் உள்ள தனித்திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். மதுரையில்  ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அவரது காதில் 18.1 சென்டிமீட்டர் வரை முடி வளர்ந்து சாதனை படைத்தார்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்தவரும் காதில் நீளமான முடி வளர்த்து சாதனை பட்டியலில் இடம் பிடித்தார். அந்த வகையில் புதுச்சேரி காவல்துறை பயிற்சி பள்ளியில் பணியாற்றும் ரகுபதி என்பவர் கின்னஸ் சாதனைக்கு தயாராகி அவரது காதில் நீளமாக முடி வளர்த்து வருகிறார். 

இவர் அடிக்கடி காதில் வளரும் முடியை அகற்றி வந்துள்ளார். இந்நிலையில் இதுபோன்ற சாதனைகளை பற்றி அறிந்த பின்னர் தானும் அதேபோல் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என கடந்த இரண்டரை ஆண்டுகளாக காது முடிகளை வெட்டாமல் தொடர்ந்து வளர்த்து வருகிறார். 

சாதனை படைக்கும் அளவுக்கு இன்னும் ஒரு சில ஆண்டுகளில் முடி வளர்த்து விடுவேன் என ரகுபதி தெரிவித்துள்ளார். 

தற்போது ரகுபதி காதில் 7 சென்டிமீட்டர் வரை முடி வளர்ந்துள்ளது. புதுச்சேரி காவல்துறையில் ரகுபதி காதில் முடி வளர்ப்பதற்காக எந்த ஒரு தடையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry police officer running Guinness record


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?




Seithipunal
-->