மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தீபாவளி போனஸ்!! குஷியில் அரசு ஊழியர்கள்!!
Puducherry govt announced Diwali bonus to govt staffs
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தீபாவளி போனஸ் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில அரசிதழ் பதிவு பெறாத குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கும் ரூ.6,900 போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.1,184 போனஸ் வழங்கப்படும் எனவும் புதுச்சேரி மாநில நிதித்துறை சார்பு செயலர் அறிவித்துள்ளார். தமிழக அரசு ஊழியர்களுக்கு கடந்த காலங்களில் 20% தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருடமும் அதே அளவு வழங்கப்படுமா? என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்துக்கொள்ளனர்.
English Summary
Puducherry govt announced Diwali bonus to govt staffs