'ஒரே நாளில் ஜல்லிக்கட்டை மீட்ட பிரதமர்' - கவர்னர் தமிழிசை பெருமிதம்!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது குடியரசு தினத்தையோடி 2 மாநிலங்களிலும் தேசிய கொடியை ஏற்றியதை பெருமையாக நினைக்கிறேன். 

இதற்கு முன்பு முதலமைச்சர் வர மாட்டார். ஆனால் இன்று அமைச்சர், முதலமைச்சர் என அனைவரும் வந்தனர். மாளிகையில் விருந்துக்கு அழைப்பு விடுத்ததால் வரவேண்டும். 

தெலுங்கானாவில் பல முறை அழைத்தும் முதலமைச்சர் வரவில்லை. அழைப்பு விடுத்தால் அன்போடு பங்கேற்க வேண்டும். அதுவே நல்லது. அனைத்து இடத்திலும் அரசியல் இருந்தால் நட்பு இல்லாமல் போய்விடும். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாற்று கொள்கையை உடையவர்கள் நட்புடன் பழகி வருகின்றனர். விருந்துக்கு வராதது நாகரீகம் என சில கட்சிகள் கருத்துகிறது. அதனை தவிர்க்க வேண்டும். 

ஜல்லிக்கட்டை மீட்டுக் கொடுத்தது திமுக என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் ஜல்லிக்கட்டை முயற்சி செய்து மீட்டவர் பிரதமர் மோடி. 3 மத்திய மந்திரிகள் ஒரே நாளில் கையெழுத்திட்டு ஜல்லிக்கட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 

தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவரின் கூட்டணி கட்சி தான் கர்நாடகாவில் உள்ளது. மேகதாது குறுக்கே அணை கட்டுவதற்கு முதல்வர் ஸ்டாலின் நட்பு ரீதியாக சென்று தடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்கள் நட்பு தப்பு ரீதியாக உள்ளது என ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry governor Tamilisai interview


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->