என்கவுண்டர் செய்த போலீசாருக்கு கிடைத்த பரிசு.! நெகிழ்ந்துபோன போலீசார்.! - Seithipunal
Seithipunal


தெலங்கானா மாநிலம் சம்சாபாத்தில் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி கால்நடை பெண் மருத்துவர்  நான்கு பேர் கொண்ட கயவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதே இடத்திலையே பெண் மருத்துவரை உயிரின் எரித்துக் கொலைகொடூரங்களை அரங்கேற்றிய நான்கு பேரும் இன்று அதிகாலை தெலுங்கானா போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர்.

பெண் மருத்துவர் வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என இந்தியா முழுவதும் அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், அந்த கொடூர மனம் படைத்த நான்கு குற்றவாளிகளையும் என்கவுன்டர் செய்த தெலங்கானா காவல்துறையையும்  பாராட்டியும், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும், பாராட்டியும் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதல்களில் ஏராளமானோர் பதிவிட்டு வருகின்றனர். 

தெலங்கானா அரசையும் காவல்துறையையும் வெகுவாக பாராட்டும் ட்விட்டர் பதிவர்கள், அதேபோல இந்த என்கவுன்டருக்கு மூலையாக செயல்பட்ட  சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனாரையும் வாழ்த்தி வருகின்றனர். பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஹைதராபாத் காவல்துறை சிறந்த பணியை மேற்கொண்டிருப்பதாகவும், இந்த சிறப்பான செயலை செய்த போலீசாருக்கு தமது வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், ஹைதராபாத் போலீசாரை பாராட்டுவதாகவும், காவலர்களை, காவலர்களாக செயல்பட அனுமதித்த, தெலுங்கானா அரசையும், காவல்துறையின் தலைமையை வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், சமூகவலைத்தளங்களில் மட்டும் இல்லாமல் நான்கு குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த போலீசாரை பொது மக்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பொதுமக்களின் நலனுக்காக செயல்படும் போலீசாருக்கு அவ்போது அரசு சார்பில் பணி உயர்வும் விருது போன்று பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அப்படி வாங்கும் விருதுகளை காட்டிலும் பொதுமக்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடும் இது போன்ற பரிசே அவர்களுக்கு கிடைத்த சிறந்த பரிசு. 

என்கவுண்டர் செய்த போலீசாரை பொதுமக்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடியதை சக காவலர்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்து ரசிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

public wishes a telugana doctor encountered police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->