ஜனநாயகத்தின் தாயகமே இந்தியா தான் - மோடி பெருமிதம்.! - Seithipunal
Seithipunal


ஜனநாயகத்தின் தாயகமே இந்தியா தான் - மோடி பெருமிதம்.!

உலக முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் விழா தமிழ் புத்தாண்டு விழா. இந்த விழாவை முன்னிட்டு நேற்று டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது இல்லத்தில், தமிழ் புத்தாண்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். 

இந்த தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் என்று பலர் பங்கேற்றுள்ளனர். அப்போது, பிரதமர் மோடி பேசியதாவது, "ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா தான். அதற்கான வரலாற்று குறிப்புகள் இங்கு ஏராளமாக உள்ளது. 

அதற்கு ஒரு முக்கியமான சான்று தமிழ்நாட்டிலுள்ள உத்திமேரூர் பகுதிதான். அதுமட்டுமல்லாமல் இந்தியா ஒரு சிறந்த ஜனநாயக நாடு என்பதற்கான சான்றுகள் சுமார் 1100-1200ம் ஆண்டுகளில் முன்னோர்களால் எழுதப்பட்ட கல்வெட்டுகளில் உள்ளது.

அந்த கால கட்டத்தில் நடைபெற்ற இந்த ஜனநாயகம் மிக்க அரசியலமைப்பு என்பது கிராம சபைகள் மூலம் தான் நடத்தப்பட்டது. இந்த கிராம சபையில், சட்டமன்றம் எவ்வாறு நடத்தப்பட வேண்டும், உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் செயல்முறையை தெரிவிக்கும். 

மேலும், உறுப்பினர்களின் தகுதி என்ன மற்றும் உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வது உள்ளிட்டவற்றை இந்த கிராம சபை முறை தெளிவாக குறிப்பிடுகிறது. உலகின் மிகப் பழமையான மொழி தமிழ் என்பதற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister modi speach in minister l murugan home new year function


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->