சாலையில் தொழுகை செய்தவர்களை காலால் எட்டி உதைத்த காவலர் - டெல்லியில் கொடூரம்.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில், இந்தர் லோக் பகுதியில் உள்ள மசூதியில் இன்று மதியம் வழக்கம்போல இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். அங்கு கூட்டம் அதிகமானதால் மசூதியின் வெளியே சாலையோரத்திலும் சிலர் தொழுகை செய்துகொண்டிருந்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அப்போது, அங்கு வந்த காவலர் ஒருவர், “எதற்காக சாலையோரமாக தொழுகை செய்கிறீர்கள். எழுந்து செல்லுங்கள்” என்று சொல்லி தொழுகையில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதம் நடத்தினார். ஒரு கட்டத்தில் சாலையில் அமர்ந்து தொழுகை செய்துகொண்டிருந்தவர்களை காலால் எட்டி உதைத்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்றவர்கள், அந்தக் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறை உயர் அதிகாரி இரு தரப்பையும் சமாதானம் செய்து கூட்டத்தைக் கலைந்து போகச் செய்தார்.

இந்த நிலையில், தொழுகையில் இருந்த முஸ்லிம்களை காவலர் காலால் எட்டி உதைக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இதை தொடர்ந்து, காலால் எட்டி உதைத்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் அமைதி காக்கும்படியும் டெல்லி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police officer suspend for hit muslims in delhi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->