மகாராஷ்டிரா : ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் குழந்தையை 5 லட்சத்திற்கு விற்க முயற்சி - 3 பேரிடம் விசாரணை.!! - Seithipunal
Seithipunal


ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் குழந்தையை 5 லட்சத்திற்கு விற்க முயற்சி - 3 பேரிடம் விசாரணை.!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் பைதான் பகுதியில் ஆதரவற்றோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் இருந்து ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தையை விற்பனை செய்ய திட்டமிட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில், பிறந்து இரண்டு மாதமே ஆன ஆண் குழந்தையை ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்ய ஆதரவற்றோர் இல்லத்தை சேர்ந்தவர்கள் திட்டமிட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்தக் குழந்தையை மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார்  அந்த குழந்தையை ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைத்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். 

அப்போது அவர் தனது குழந்தையை தத்து கொடுப்பதற்காக பைதானை சேர்ந்த ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைத்ததாக தெரிவித்தார். இருப்பினும் போலீசார் அவர் கூறுவது உண்மைதானா அல்லது குழந்தை எங்கிருந்தாவது கடத்தப்பட்டதா? என்று சந்தேகித்து தீவிர விசாரணை நடத்தினர். 

அதில், ஆதவற்றோர் இல்லம் சட்டப்பூர்வமாக தத்தெடுப்பை மேற்கொள்வதற்கு போதுமான அனுமதி எதையும் பெறவில்லை என்றுத் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police investigation to three peoples foe sale baby in maharastra


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->