டேராடூன் - டெல்லி இடையே வந்தே பாரத் ரெயில் சேவை... நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி...! - Seithipunal
Seithipunal


உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மற்றும் டெல்லி இடையே புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி நாளை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த வந்தே பாரத் ரயில் டேராடூனுக்கும், டெல்லிக்கும் இடையே ஹரித்வார், ரூர்க்கி, சஹாரன்பூர், முசாபர்நகர் மற்றும் மீரட் ஆகிய ஐந்து இடங்களில் மட்டும் நின்று செல்லும் என்று ரெயில்வே வாரியத்தின் இணை இயக்குநர் விவேக் குமார் சிசின்ஹா தெரிவித்துள்ளார்.

இந்த ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 110 கிலோமீட்டராக இருக்கும். அதே நேரத்தில், சராசரி வேகம் 63.41 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 314 கிமீ தூரத்தை நான்கு மணி நேரம் 45 நிமிடங்களில் கடக்கும் என்றும், புதன்கிழமை தவிர வாரத்தின் ஆறு நாட்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது டெல்லிக்கு இயக்கப்படும் ஐந்தாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi will inaugurate the Vande Bharat train service between Dehradun and Delhi tomorrow


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->