பதவியேற்ற சித்தராமையா, டிகே சிவக்குமார்...! பிரதமர் மோடி வாழ்த்து...! - Seithipunal
Seithipunal


கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் இன்று பதவியேற்றனர். இதற்கான பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் பிரியங்கா காந்தி, தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின், பீகார் முதல்-மந்திரிகள் நிதிஷ்குமார், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், கர்நாடக முதல்வராகவும், துணை முதல்வராகவும் பதவியேற்றுள்ள சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள சித்தராமையா அவர்களுக்கும், துணை முதல்வராக பதவியேற்றுள்ள டி.கே.சிவகுமார் அவர்களுக்கு வாழ்த்துகள். சிறப்பான பதவிக்காலம் அமைய எனது வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM modi congratulates Siddaramaiah and D K Sivakumar on taking oath


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->