காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைந்து நலமடைய வேண்டும்.! பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி விரைவில் நலமடைய பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட பின்பும், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்ட அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் சோனியா காந்தி விரைந்து நலமடைய பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், "கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைந்து குணமடைய வேண்டும்" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேபோல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், " கொரோனா தொற்று உறுதி செய்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன். தொற்றுநோய் இன்னும் நீங்காததால் பொது வாழ்வில் உள்ள அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pm modi and Stalin greet Sonia Gandhi should get well soon


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->