இண்டிகோ விமானத்தில் பணிப்பெண்ணுக்கும் பயணிக்கும் இடையே வாக்குவாதம்.! - Seithipunal
Seithipunal


கடந்த 16 ஆம் தேதி துருக்கி நாட்டின் உள்ள இஸ்தான்புல்லில் இருந்து இந்தியாவில் உள்ள டெல்லியை நோக்கி இண்டிகோ 6இ 12 என்ற விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, இந்த விமானத்தில் உணவைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக பயணிக்கும் விமானப் பணிப்பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. 

இந்த மோதல் குறித்த வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் பரவி வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், பயணி ஒருவர் விமானப் பணிப்பெண்ணிடம் "நீங்கள் பயணியின் வேலைக்காரன்" என்று கூறுகிறார். அதற்கு அந்த பணிப்பெண் "நான் ஒரு பணியாளர், உங்கள் வேலைக்காரன் அல்ல... என்று பதில் கூறுகிறார்.

இதையடுத்து, பயணி ஒருவர் "ஏன் கத்துகிறீர்கள்? வாயை மூடு" என்று பணிப்பெண்ணிடம் கூற அதற்கு பணிப்பெண் அந்த பயணியை "வாயை மூடு" என்று  கூறுகிறார். 

இந்த சம்பவம் தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, "இந்த சம்பவம் குறித்து ஒழுங்குமுறை ஆணையம் முறையான விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

plane servent and passenger argument in indigo airplane


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->