ஜிப்மர் மருத்துவமனையின் டாக்டரை தாக்கிய மக்கள்! போலீசார் விசராணை! - Seithipunal
Seithipunal


குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததாக தெரிவித்து ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது:

புதுச்சேரி: நெட்டப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தியாகு. இவருக்கு 11 மாத பெண் குழந்தைக்கு உள்ளது. 

குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் தியாகு, குழந்தையை ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் மருத்துவர்கள், குழந்தைக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வேன்டும் என பரிந்துரை செய்தனர். அதற்க்கு முன்னதாக குழந்தைக்கு மருந்து செலுத்தப்பட்டது. 

அதன் பிறகு குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமானதாக தெரிய வந்தது. இதனால் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இந்நிலையில் தியாகுவின் உறவினர்கள் குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு வந்து, தவறான சிகிச்சை அளித்ததால்தான் குழந்தைக்கு மேலும் உடல்நிலை மோசமானதாக தெரிவித்து அங்கிருந்த மருத்துவரிடம் வாக்குவாதம் செய்தனர். 

மேலும் ஆத்திரமடைந்த அவர்கள் மருத்துவரை தாக்கினர். இதனால் ஜிப்மர் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

உடனே அங்கிருந்த காவலாளிகள் தியாகுவின் உறவினர்களை ம்ருர்த்துவமனையில் இருந்து வெளியேற்றினர். இதனால் ஆத்திரமடைந்த தியாகுவின் உறவினர்கள் கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். 

இது தொடர்நப்பாக புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People attacked the doctor of Jipmar Hospital


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->