பஞ்சாப் : அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன்... சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்பு படையினர்..! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சர்வதேச எல்லை அருக பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஷாயித்பூர் கலான் கிராமத்தின் குருத்வாரா அருகே ட்ரோன் முற்றிலும் உடைந்த நிலையில் எல்லை பாதுகாப்பு படையினர் இன்று காலை கண்டுபிடித்தனர்.

இதற்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை பஞ்சாபின் டர்ன்-தரண் மாவட்டத்தில் உள்ள ராஜோக் கிராமத்தின் புறநகரில் பஞ்சாப் காவல்துறையுடன் இணைந்து நடத்திய கூட்டு தேடுதல் நடவடிக்கையில் மாலை 6 மணியளவில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு ட்ரோனை கண்டுபிடித்தனர். 

மேலும் கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஆளில்லா விமானங்கள் ஊடுருவும் சம்பவங்கள் அதிகரித்து அதிகரித்து வருகின்றன. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நான்குக்கும் மேற்பட்ட நூல்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan Drone Shot Down Near International Border in Punjab Amritsar


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->