காற்று மாசுபாடு எதிரொலி.! வரும் 8ஆம் தேதி வரை நொய்டாவில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தீபாவளி பண்டிகையின்போது உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக மாறியது. காற்று மாசை தவிர்க்க காற்று சுத்திகரிப்பு கோபுரம் என பல முயற்சிகளை அரசு செய்து வந்தபோதிலும், தற்போது காற்றின் தரம் குறியீடு "மிகவும் மோசம்" என்ற நிலையில் உள்ளது.

மேலும் டெல்லிக்கு அடுத்தபடியாக மேற்கு உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் காற்றின் தரக் குறியீடு கடுமையான அளவை எட்டியது.

இதனால் காற்று மாசுபாடு காரணமாக நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை வரை ஆன்லைனில் வகுப்புகள் நடத்துமாறு கவுதம் புத் நகரின் மாவட்ட பள்ளி கண்காணிப்பாளர் தர்மவீர் சிங் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முடிந்தவரை ஆன்லைனில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டும், அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டு அல்லது கூட்டங்கள் போன்றவை நடத்த தடை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Online classes for school students in Noida till 8th due to air pollution


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->