திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கே.ஜி.எஃப்.,ல் ஒருவர் கைது..!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலையில் கடந்த 12ம் தேதி அதிகாலை 4 ஏடிஎம் மையங்களில் ரூ.72.50 லட்சம் கொள்ளை அடித்த விவகாரத்தில் 6 பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதாக போலீசார் தெரிவித்திருந்தனர். 

மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொழுது ஆந்திர பதிவும் கொண்ட கார் மூலம் கொள்ளையர்கள் தப்பி சென்றது தெரிய வந்தது. மேலும் காரின் பதிவெண்ணை கொண்டு ஆராய்ந்த பொழுது அது போலி என தெரிய வந்தது. மேலும் காத்திருக்கப்பட்டது தொடர்பான வழக்கு திருப்பதியில் பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் திருவண்ணாமலை ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த நபர்கள் வேலூர் மாவட்ட எல்லைக்கு சென்று ஆந்திர மாநிலம் வழியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் கேஜிஎஃப் பகுதிக்கு தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது.

இந்த கொள்ளையர்கள் காவல்துறையினர் வருவதை அறிந்து அவர்களின் செல்போனை ஸ்வீட்ச் ஆப் செய்து விட்டு அங்கு இருந்து வெளிமாநிலங்களுக்கு தப்பி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. திருவண்ணாமலை ஏடிஎம் மைய கொள்ளையர்கள் அசாம் பகுதியை சேர்ந்த நபர்கள் எனவும் நம்பப்படுகிறது. 

இது தொடர்பாக கேஜிஎப் பகுதியில் சிறப்பு தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தங்க வைத்த கர்நாடக பகுதியை சேர்ந்த நபரை தற்பொழுது கைது செய்துள்ளதாகவும், அந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிடிபட்ட நபர் மூலம் கொள்ளையர் குறித்தான மேலும் சில தகவல்கள் பெற காவல்துறையினர் முயற்சித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One person arrested in KGF in thiiruvannamalai ATM robbery case


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->