ஷாக் கொடுத்த மின் கட்டணம் - தனியாக இருக்கும் மூதாட்டிக்கு 1 லட்சம் கட்டணமா? - Seithipunal
Seithipunal


ஷாக் கொடுத்த மின் கட்டணம் - தனியாக இருக்கும் மூதாட்டிக்கு 1 லட்சம் கட்டணமா?

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோப்பல் மாவட்டம் பாக்யா நகரில் வசிப்பவர் கிரிஜாம்மா. தொண்ணூறு வயது மூதாட்டியான இவருக்கு வழக்கமாக சுமார் 70 ரூபாய் மட்டுமே மின் கட்டணமாக வரும். ஆனால் இந்த மாதம் பெரிய தொகை வந்திருந்ததைப் பார்த்த அவர் அருகிலிருந்தவர்களிடம் விசாரணை செய்ததில், மின் கட்டணமாக ரூ.1 லட்சம் வந்திருப்பது உறுதியானது. 

இந்த மின்கட்டண ரசீதை பார்த்த சமூக ஆர்வலர்கள் சிலர் அதனை ஊடகங்களில் வெளியிட்டனர். இந்தப் பத்திவைப் பார்த்த மாநில மின்சாரத்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். 

அதன் முடிவில் மின்சார மீட்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் மின்கட்டணம் அதிகளவு வந்தது கண்டறியப்பட்டது. இந்த மின்கட்டணம் உயர்வு குறித்து மின்சார வாரிய ஊழியர்கள் விளக்கமளித்த பிறகே கிரிஜாம்மா இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார்.

இந்த சம்பவம் எதிர்கட்சிகளுக்கு சாதகமாக அமைந்ததால் அவர்கள் இந்த சம்பவத்தை முன்வைத்து ஆளும் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வருகின்றனர். ஆளும் கட்சியான காங்கிரஸ் கிருஹ லஷ்மி திட்டத்தின் கீழ் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்தது. 

ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் 200 யூனிட்டுக்கு மேலான மின் பயன்பாட்டுக்கு கட்டணத்தை உயர்த்தி அறிவித்தது. இதைக்கண்டித்து தொழில் நிறுவனங்கள் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே மூதாட்டியின் இந்த மின்கட்டணம் பேசு பொருளாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one lakh electricity bill to old woman in karnataga


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->