மனைவியிடம் இருந்து பிரிந்த முன்னாள் முதல் மந்திரி: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா, பிரிந்து சென்ற தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். 

தேசிய மாநாட்டு கட்சி தலைவரான உமர் அப்துல்லாவின் இந்த மனு கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி, திருமண முறிவை நிரூபிக்க தவறி விட்டதாக தெரிவித்து விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உமர் அப்துல்லா டெல்லி உயர்நீதிமன்றத்தில், பிரிந்து சென்ற தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்குமாறு மேல் முறையீடு செய்தார் . 

இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உமர் அப்துல்லாவின் விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்தது. 

மேல்முறையீட்டு மனுவில் எந்த தகுதியும் இல்லை என தெரிவித்த நீதிபதிகள் கீழ் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Omar Abdullah petition rejected Delhi high court


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->