அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பொது விடுமுறை நாட்கள் அறிவித்து வருகிறது. அதன்படி, அக்டோபர் மாதம் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாநிலம் சார்ந்த பண்டிகைகள், மத விடுமுறைகள் மற்றும் பொது பண்டிகைகள் இந்த வகைகளின் கீழ் ரிசர்வ் வங்கி விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி,

அக்டோபர் மாதத்தின் வங்கி விடுமுறை நாட்கள்;

அக்டோபர் 1- வங்கிக் கணக்குகளின் அரையாண்டு மூடல் (கேங்டாக்)

அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி

அக்டோபர் 4 - ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை

அக்டோபர் 6- மஹாளய அமாவாசை (அகர்தலா, பெங்களூரு, கொல்கத்தா)

அக்டோபர் 7 – மேரா சாரென் ஹௌபா (இம்பால்)

அக்டோபர் 9- 2வது சனிக்கிழமை

அக்டோபர் 10 – ஞாயிற்றுக்கிழமை

அக்டோபர் 12- துர்கா பூஜை (மகா சப்தமி) / (அகர்தலா, கொல்கத்தா)


அக்டோபர் 13- துர்கா பூஜை (மகா அஷ்டமி) / (அகர்தலா, புவனேஸ்வர், காங்டாக், குவஹாத்தி, இம்பால், கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி)

அக்டோபர் 14 – துர்கா பூஜை/தசரா (மகா நவமி)/ஆயுத பூஜை (அகர்தலா, பெங்களூரு, சென்னை, காங்டாக், குவஹாத்தி, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, பாட்னா, ராஞ்சி, ஷில்லாங், ஸ்ரீநகர், திருவனந்தபுரம்)

அக்டோபர் 15- துர்கா பூஜை/தசரா/தசரா/விஜய தசமி (இம்பால் மற்றும் சிம்லாவில் அமைந்துள்ள வங்கிகளைத் தவிர அனைத்து வங்கிகளுக்கும் அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படும்)

அக்டோபர் 16- துர்கா பூஜை (காங்டாக்)

அக்டோபர் 17- ஞாயிற்றுக்கிழமை

அக்டோபர் 18- கடி பிஹு (கௌஹாத்தி)

அக்டோபர் 19- மிலாடி நபி 

அக்டோபர் 20- மகரிஷி வால்மீகியின் பிறந்தநாள்/லக்ஷ்மி பூஜை/இத்-இ-மிலாத் (அகர்தலா, பெங்களூரு, சண்டிகர், கொல்கத்தா, சிம்லா)

அக்டோபர் 22- 4வது சனிக்கிழமை

அக்டோபர் 23- ஞாயிற்றுக்கிழமை

அக்டோபர் 24- தீபாவளி பண்டிகை

அக்டோபர் 26- இணைப்பு நாள் (ஜம்மு, ஸ்ரீநகர்)

அக்டோபர் 31- ஞாயிற்றுக்கிழமை

விடுமுறை பட்டியலில் உள்ள நாட்களில், உங்கள் மாநிலம் அல்லது பகுதி சார்ந்த விடுமுறையாக அது வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பண்டிகை நாட்கள் மட்டுமல்லாமல், வார இறுதி நாட்களில் வரும் விடுமுறைகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகிறது என்பதையும், அனைத்து வங்கி நிறுவனங்களும் ஒரே மாதிரியான விடுமுறையை கடைப்பிடிப்பதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

October Month 21 days holiday Bank reserve Bank of India


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->