படிப்பை நிறுத்திட்டேனா? - நா.த.க வேட்பாளர் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தருமபுரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் அபிநயா பொன்னிவளவனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- 

”மருத்துவம் படித்துக் கொண்டிருந்த பெண்ணின் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தேர்தலில் நிற்க வைத்துள்ளேன்” என்று பேசியிருந்தார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் அபிநயா செய்தியாளர்களிடம் பேசியதாவது:- "வேட்பாளர் அறிமுக கூட்டத்திலேயே அண்ணன் சீமான் சொல்லியிருக்காரு மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார் என்று. 

ஒவ்வொரு இடத்திலேயும் மேற்படிப்பு படிக்கிறார் என்று சொல்ல வேண்டிதில்லை. படிப்பு இடைநிறுத்தம் என்று சொல்லாமல் மருத்துவப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தேர்தலில் நிற்க வைத்துள்ளேன்னு ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார். நான் பிஎஸ்எம்எஸ் முடித்துவிட்டு, எம்டி மெடிசன் டிபார்ட்மெண்ட் எடுத்து படித்துக் கொண்டு இருக்கிறேன்.

அது 3 வருட படிப்பு அதில் இரண்டரை ஆண்டுகள் முடிந்து விட்டது. நான் 2020-ல் படிப்பில் சேர்ந்தேன். இந்நேரம் படிப்பு முடிந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இந்த படிப்பில் சேர்ந்தவர்கள் எல்லோரும் கடந்த டிசம்பரிலேயே படிப்பை முடித்து விட்டார்கள். ஆனால், 2020 கொரோனா காலம் என்பதாலும், மகாராஷ்டிராவில் படிப்பதாலும் 6 மாதங்கள் காலதாமதமாகி இருக்கிறது. மகாராஷ்டிரா ஹெல்த் அண்டு சயின்ஸ் யூனிவர்சிட்டியில காலதாமதம் ஆனது.

தேர்வுக்கு இன்னும் ஒருமாதம் இருப்பதால் கல்லூரியில் அனுமதி பெற்றுதான் தேர்தல் களத்துக்கு வந்திருக்கேன். ஆயுர் டிபார்ட்மெண்ட்ல இருந்து இப்படியொரு வாய்ப்பு கிடைப்பது நல்ல விசயம்தானே நீ போம்மான்னு அவங்களும் அனுமதி கடிதத்தோடுதான் அனுப்பியிருக்காங்க. என்னோட விருப்பம், கல்லூரியின் ஒப்புதல் என எல்லாமே முறைப்படிதான் நடக்குது. படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டு, சட்ட விரோதமா பணம் கொடுத்து சான்றிதழ் வாங்கினேன் என்பதெல்லாம் இல்லை. அறிமுக கூட்டத்துல அண்ணன் தெளிவா சொன்னாரு. ஆனா, இங்கு டக்குன்னு மேலோட்டமா சொல்லிட்டதால அப்படி தெரியுது” என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ntk candidate abinaya explanation in stop study


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->