சிக்ஸர் அடிப்பதில் மட்டுமல்ல...வரியிலும் 'தல' தான் கெத்து...! - ஜார்க்கண்ட் - பீகாரில் முதலிடம் பிடித்த தோனி...!
Not only hitting sixes but also line Thala Kethu Dhoni tops list Jharkhand Bihar
ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் 2025-26 நிதியாண்டில் வருமான வரி வசூல் கணிசமான உயர்வை பதிவு செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து சுமார் ரூ.20 ஆயிரம் கோடி வரி வசூலிக்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

இரு மாநிலங்களின் மொத்த வரி செலுத்துநர்களை ஒப்பிடுகையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் MS Dhoni தனிநபர் அளவில் அதிக வரி செலுத்தியவராக முதலிடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், அவர் செலுத்திய துல்லியமான வரித்தொகை வெளியிடப்படவில்லை.இதுகுறித்து பீகார்-ஜார்க்கண்ட் வருமான வரித்துறையின் முதன்மை தலைமை ஆணையர் டாக்டர் டி.சுதாகர ராவ் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து மட்டும் ரூ.12 ஆயிரம் கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மொத்த வரி வசூலில் சுமார் 70 சதவீதம் ‘மூலத்திலேயே வரி பிடித்தம்’ முறையின் மூலம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சேர்த்து சுமார் 5.5 கோடி பேர் பான் அட்டை வைத்திருப்பதாகவும், ஆனால் அதில் 40 லட்சம் பேர் மட்டுமே வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புள்ளிவிவரங்கள், வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளதாக பொருளாதார வட்டாரங்கள் மதிப்பிட்டு வருகின்றன.
English Summary
Not only hitting sixes but also line Thala Kethu Dhoni tops list Jharkhand Bihar