உ.பி-யில் 'தி கேரளா ஸ்டோரி ' படத்திற்கு வரி விலக்கு - முதல்வர் யோகி ஆதித்யநாத்  அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் இந்து இளம் பெண்களை மூளை சலவை செய்து மதம் மாற்றி ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக எடுக்கப்பட்ட படம் தான் தி கேரளா ஸ்டோரி திரைப்படம். கேரளாவில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நிலையில் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதனையடுத்து தமிழகத்தில் கடந்த மே 5ம் தேதி பலத்த பாதுகாப்புகளுடன் வெளியாகியது. இந்த படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அசம்பாவிதங்களை தவிர்க்க திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதனிடையே நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தை  திரையிட தடை விதிக்க முடிவு செய்ததாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் அறிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது அமைச்சர்களுடன் இந்த படத்தைப் பார்க்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, மத்தியபிரதேசம் மாநிலத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

No tax for the Kerala story movie in uttar Pradesh


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->