உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களை சேர்க்க மருத்துவ கவுன்சில் சட்டத்தில் இடமில்லை - மத்திய அரசு - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரினால் லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

மேலும் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் பயின்று வந்த மாணவர்கள் அவர்களது தாயகத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அவர்களின் கல்வி நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் தாயகம் திரும்பிய சுமார் 2000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களின் கல்வியை இந்தியாவில் தொடர மத்திய அரசுக்கு பல தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து இந்தியா பல்கலைக்கழகங்களில் படிப்பை தொடர மருத்துவ கவுன்சில் சட்டத்தில் இடமில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கிற்கு மத்திய அரசு பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

மேலும் இந்திய முதன்மை பல்கலைக்கழகங்களில் குறைந்த நீட் மதிப்பெண் பெற்ற மாணவர்களை சேர்க்க முடியாது என்றும், அதிகப்படியான கட்டணத்தை உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் செலுத்த முடியாது என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

No law in medical council to permit Ukraine return students


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->