சீன நிறுவனங்கள் இந்திய சந்தையை பிடிக்க விரும்புகின்றன - நிதி ஆயோக் துணைத்தலைவர் பேட்டி.! - Seithipunal
Seithipunal


நிதி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவரான சுமன் பெரி, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- "தற்போது, இந்தியாவில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்வது குறைவாகவும், அங்கிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்வது மிக அதிகமாகவும் உள்ளது. அதனால், நாட்டில் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது. 

அதனால், நாம் இந்த பற்றாக்குறை மீது கவனம் செலுத்துவதை விட சில முக்கிய பொருட்களுக்காக சீனாவை இந்தியா சார்ந்து இருப்பதைக் குறைக்க வேண்டும். அதாவது, சீனா தீவிர மருந்தியல் உட்பொருட்களை அதிக அளவில் தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது. 

இந்த உட்பொருட்களை பல்வேறு இந்திய நிறுவனங்கள் மருந்துகள் தயாரிப்பதற்காக இறக்குமதி செய்து வருகின்றது. அதுபோல், சீனாவை சார்ந்து இருப்பதை குறைத்து, வேறு வினியோக ஆதாரங்களை நாட வேண்டும். 

கடந்த ஏழு ஆண்டுகளாக அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசு நாடுகள், வர்த்தக சார்புநிலையை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றன. அதில், சீன நிறுவனங்கள், சந்தைகளை எதிர்பார்க்கின்றன. இந்திய சந்தையை பிடிப்பதற்கு விரும்புகின்றன. அவை ஏகபோக அதிகாரம் செய்வதை நாம் தடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Niti Aayog Deputy Chairman suman peri press meet


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->