சிறுநீரை பற்றி உங்களுக்கு தெரியவில்லை!! நிதின் கட்கரி அதிரடி - Seithipunal
Seithipunal


நிதின் கட்கரி பல்வேறு ஆலோசனைகளை தொடர்ந்து மக்களுக்கு கூறி வருகிறார். அவரது ஆலோசனைகளை யாரும் அங்கீகரிக்காவிட்டாலும், தொடர்ந்து அடுத்தடுத்த யோசனைகளை வழங்கி வருகிறார். 

சில ஆண்டுகளுக்கு முன்பு, கட்கரி தன்னுடைய சிறுநீரைச் சேமித்து, அதை டெல்லியில் உள்ள தனது வீட்டுத் தோட்டத்துக்கு உரமாகப் பயன்படுத்துவதாகவும் அதன்மூலம், உற்பத்தி 25% அதிகரித்ததாகவும் கூறியிருந்தார்.  

தற்பொழுது அதை போலவே கூறப்பட்ட ஒரு யோசனை தான். சிறுநீரை சேமித்து உரமாகலாம் என்பது. இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு விருது வழங்கும் விழா நாக்பூர் நகராட்சி சார்பில் நடைபெற்றது. இதில் நிதின் கட்கரி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், " மனித சிறுநீரைச் சேமித்து உரமாக்கலாம்" என்ற யோசனையை கூறியுள்ளார். 

மேலும், இது இந்தியாவில் நடந்தால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா உரமே இறக்குமதி செய்யவேண்டியதில்லை. சிறுநீரை பற்றி உங்களுக்கு தெரியவில்லை. இயற்கைக் கழிவுகளில் இருந்து தான் எரிபொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

மனித சிறுநீரில் நைட்ரஜன் மற்றும் அம்மோனியம் சல்பேட் போன்றவை உள்ளது. இதனை பயன்படுத்தி எரிபொருட்களைத்  தயாரிக்க முடியும். அனைத்து விமான நிலையங்களிலும் சிறுநீரைச் சேமிக்கச் சொல்லி கொண்டு இருக்கிறேன். 

நாம் விவசாயத்துக்காக நாம் யூரியாவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும், சிறுநீரைச் சேமித்து உரமாக பயன்படுத்தும் பட்சத்தில், நாம் உரத்தை வெளிநாடுகளில்இருந்து இறக்குமதி செய்யவேண்டிய அவசியம் இருக்காது'' என கூறியுள்ளார். 

English Summary

nithin gadkaari says about natural Fertilizer using urine


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து




கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து




Seithipunal