எல்லாத்தையும் கவனித்துக்கொண்டு உள்ளேன்.. அனைத்தும் எனக்கு தெரியும்.. நிர்மலா சீதாராமன் பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் தற்போதைய பட்ஜெட்டில், வரும் 2022 ஆம் வருடத்திற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் பொருட்டு, வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.15 இலட்சம் கோடி பயிர்க்கடன் வழங்குவது அறிவிக்கப்பட்டது. 

இதுமட்டுமல்லாது வேளாண்மை மற்றும் வேளாண்துறைகளில் உள்ள பல்வேறு திட்டத்திற்கு ரூ.1.6 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமருடைய விவசாயிகளின் நிதியுதவி திட்டத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நேரத்தில், தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியுடைய மத்திய குழுவின் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

இந்த பேட்டியின் போது, பயிர்கடன்களின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. பயிர்க்கடன் என்பது அந்தந்த பகுதிகளுக்கு உள்ளூர் தேவையை பொறுத்து அமையும். தேவையினை அதிகரித்து பயிர்க்கடன் வழங்கும் விஷயத்தில் இலக்கினை அடைய எதிர்பார்த்து காத்துள்ளோம். கடன் வழங்கும் செயல்பாடுகள் மற்றும் வங்கிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

கிராமப்புறங்களில் செயல்பட்டு வரும் வங்கிகள் அதிகளவு கண்காணிக்கப்படுகிறது. பயிர்க்கடன் வழங்குதல் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தலில் இலக்கை அடைய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nirmala sitharaman speech about village banks for agri loan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->