உத்திரபிரதேசம்: அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பால் பள்ளிகளுக்கு புது உத்தரவு.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ், கான்பூர் உள்பட பல்வேறு நகரங்களில் கொசுக்களால் பரவ கூடிய டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது.

இதனால் மாநிலத்தில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பை கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் முழுக்கை சட்டை மற்றும் முழு கால் சட்டை அணியுமாறு உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக இடைநிலைக் கல்வித்துறை அனைத்து மாவட்ட பள்ளி அலுவலர்களுக்கும், மாணவர்களை டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

மேலும் டெங்கு காய்ச்சலில் இருந்து மாணவர்களை பாதுகாக்க பள்ளிகள் மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என இடைநிலைக் கல்வி இயக்குனர் மகேந்திர தேவ் தெரிவித்துள்ளார்.

மாணவர்களை முழுக்கை சட்டை மற்றும் முழு கால் சட்டையுடன் பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்த வேண்டும் என்றும், தினசரி பிரார்த்தனை கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து குழந்தைகளுக்கு கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் என்றார்.

மேலும் பள்ளி வளாகத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தல் ஆகியவை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New order for schools due to increasing dengue cases in uttar pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->